ரூ.1 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்ட ஆடு: ஆட்டை விற்க மறுத்த உரிமையாளர்!

வியாழன், 29 ஜூன் 2023 (15:58 IST)
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆடு ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்ட நிலையிலும் அந்த விலைக்கு ஆட்டை கொடுக்க முடியாது என ஆட்டின் உரிமையாளர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆட்டின் விலை என்பது ஆயிரக்கணக்கில் மட்டுமே இருக்கும் நிலையில் இலட்சக்கணக்கில் ஆடு விற்பனையானாலே அதை மிகப்பெரிய ஆச்சர்யத்துடன் பார்த்து வருவது உண்டு. 
 
ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஆட்டை ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டதாக தெரிகிறது. ஆனாலும் அந்த ஆட்டை ஆட்டின் உரிமையாளர் கொடுக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. 
 
அந்த ஆட்டுக்கு மாதுளை பப்பாளி காய்கறிகள் ஆகியவற்றை சிறப்பு உணவாக அளித்து பாசத்துடன் வளர்த்து வருவதாக கூறினார். மேலும் இஸ்லாமை குறிக்கும் எண்ணான 786 என்ற எண் ஆட்டின் வயிற்றில் இருப்பது தான் இந்த ஆட்டுக்கு  ஒரு கோடி கொடுக்க முன்வந்ததற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்