பைக், கார் காவல் வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது!

வெள்ளி, 16 ஜூன் 2023 (13:06 IST)
கோவை மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட 09 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 06 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 15 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் நாளை  17.06.2023 - ம் தேதி காலை 10.00 மணிக்கு கோவை அவினாசி சாலையில் உள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. 
 
மேற்கண்ட வாகனங்கள் கோவை மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள்   ஆயுதப்படை வளாகத்தில் இருசக்கர வாகனத்திற்கு ரூ.1000/- மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.2000/- முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை (Token) பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். 
 
பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் எடுத்தவுடன் முழுத் தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (GST) (இரு சக்கர வாகனங்களுக்கு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18%) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன். தகவல் தெரிவித்து உள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்