தன்னுடன் பேசுவதை நிறுத்திய காதலியை, காதலனே அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் உள்ள கற்குடி என்ற கிராமத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் திருமலைக்குமார். சில ஆண்டுகள் முன்னதாக திருமலைக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி வெளியே செல்வது என காதலித்து வந்துள்ளனர்.
ஆனால் சில நாட்களாக இருவருக்கும் மனஸ்தாபம் அதிகரித்த நிலையில் அந்த பெண் திருமலையிடம் பழகுவதை குறைத்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து திருமலை அந்த பெண்ணிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அந்த பெண் பேசுவதை முற்றிலும் நிறுத்திக் கொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த திருமலை வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துச் சென்று அந்த பெண்ணை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். தலையில் பலத்த வெட்டுக்காயத்துடன் மருத்துவமனையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் திருமலையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Edit by Prasanth.K