தீ விபத்தில் சிறுமி பரிதாப பலி…

Webdunia
சனி, 10 ஜூன் 2023 (17:32 IST)
நரசமங்கலத்தில் விளக்கு ஏற்றும்போது, ஏற்பட்ட விபத்தில் 15 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் நரசமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் அண்ணாமலை(47). இவரது மகள் ஹேமாவதி(15). இவர் கடந்த மே மாதம் 14 ஆம் தேதி கிராமத்தில் உள்ள கோவிலுக்குச் சாமி கும்பிட சென்றார்.

அப்போது, கோயிலில் ஏற்றப்பட்டிருந்த அகல் விளக்கில் இருந்து எதிர்பாரா விதமாக ஹேமாவதியின் சுடிதாரில் தீப்பற்றியது.

இதனால், அவரது உடலின் பின்பகுதி மற்றும் கழுத்தில் தீக்காயம் ஏற்பட்டது., உடனே அவரை மீட்டு தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்