நான் ஏன் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டேன்! – ஜெர்மனி மாணவர் விளக்கம்

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (13:51 IST)
இந்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஜெர்மனி நாட்டவர் ஒருவர் போராடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை ஐஐடி மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த ஜேக்கப் லின்டென்தல் என்ற மாணவரும் பங்கேற்றார். இந்த போராட்டத்தில் அவர் பங்கேற்ற போது சர்ச்சைக்குரிய ஒரு பதாகையை அவர் கையில் ஏந்தி உள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து குடியுரிமை துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின்னர் அவர் விசா விதிகளை மீறி உள்ளதால் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டார். இதனை அடுத்து சென்னையில் இருந்து அவர் நேற்று மாலையே பெங்களூர் திரும்பினார்

இந்நிலையில் தான் போராட்டத்தில் கலந்து கொண்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள மாணவர் ஜேக்கப் “குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போராட்டம் அனுமதி இல்லாமல் நடந்தது என்பதே அதிகாரிகள் சொன்ன பிறகுதான் எனக்கு தெரியும். மாணவர் விசாவில் படிக்க வருபவர்கள் இதுபோன்ற போராட்டங்களில் கலந்து கொள்ள கூடாது என்று அவர்கள் தெரிவித்தனர். நான் மன்னிப்பு கேட்டும் அதை அவர்கள் ஏற்காமல் என்னை நாட்டை விட்டு வெளியேற சொல்லிவிட்டனர்” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்