காப்பாத்துங்க ப்ளீஸ்... போலிஸ் ஸ்டேஷன் ஓடிய காயத்ரி ரகுராம்!

Webdunia
செவ்வாய், 26 நவம்பர் 2019 (13:47 IST)
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காயத்ரி ரகுராம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு வேண்டி கோரிக்கை வைத்துள்ளார். 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்து மதம் குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. திருமாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்ட காயத்ரி ரகுராம் அவரை பற்றி அவதூறான வார்த்தைகளை உபயோகித்தார். 
 
இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பலர் காயத்ரி வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தனக்கு திருமா கட்சியை சேர்ந்த சிலர் அவதூறான வார்த்தைகளால் திட்டுவதாக காயத்ரி ட்விட்டரில் பதிவிட்டார்.
 
மேலும் இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு தான் பயப்படப் போவதில்லை எனவும், இந்து மதம் குறித்து விவாதிக்க விரும்பினால் நேரில் தன்னை சந்திக்கலாம் என்றும் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து அவரது ட்விட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது. விசிகவினர் தொடர்ந்து ரிப்போர்ட் அடித்ததால் அந்த கணக்கு முடக்கப்பட்டிருக்கலாம் என சில ஊகங்கள் வலம் வந்தாலும், கணக்கு முடக்கத்திற்கான சரியான காரணங்கள் தெரியவில்லை.
 
இந்நிலையில் தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்த காயத்ரி ரகுராம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தாவது, சமூக வலைதளங்கள் மற்றும்  தொலைபேசிகள் மூலம் மர்மநபர்கள் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்துகின்றனர். 
 
அதோடு எனது வீட்டிற்கு வெளியிலும் மர்ம நபர்கள் உலாவுவதால் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளார். யாராக இருந்தாலும் நேரில் வாங்க என தேதி, இடம், நேரம் குறித்து கூப்பிட்ட காயத்ரி இப்போது காவல் நிலையத்தில் பாதுகாப்பு வேண்டியுள்ளது கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்