காயத்ரி ரகுராம் பெற்ற புதிய பதவி: அண்ணாமலைக்கு நன்றி!

Webdunia
சனி, 11 ஜூன் 2022 (20:20 IST)
நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான காயத்ரி ரகுராமுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதிய பதவியை அளித்து உள்ளார் 
 
து குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சியின் மாநில தலைவராக திருமதி காயத்ரி ரகுராம் அவர்கள் நியமிக்கப்படுகிறார். தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்’ என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்
 
இதனை அடுத்து அண்ணாமலை தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டரில், ‘இந்தியா முழுவதும், உலகம் முழுவதிலுமிருந்து உள்ள தமிழர்களை ஒன்றிணைப்போம். தமிழகத்தில் தாமரை வலுவாக வளர கரங்கள் சேருங்கள். பாரத அன்னை புகழ் ஓங்குக. வாழ்க தமிழ், வளர்க தமிழ்! என்றும் பதிவு செய்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்