அண்ணாமலை முன் 1000க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைப்பு!

வியாழன், 9 ஜூன் 2022 (20:35 IST)
அண்ணாமலை முன் 1000க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைப்பு!
தமிழகத்தில் பாஜக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவதாக அதன் எதிரிக்க்கட்சிகளை ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில் இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சியில் தமிழக பாஜக தலைவர்  அண்ணாமலை முன் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அண்ணாமலை அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களின் எட்டாண்டு சாதனையால் ஈர்க்கப்பட்டு, தேசத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் திரளாக முன்வந்து, சேலம் மாநகர மாவட்டத்தில் நம் கட்சியில் இணைந்தனர்.
 
வந்தாரை எல்லாம் வரவேற்று, கட்சியின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் எடுத்துரைத்து, உறுப்பினர் அட்டை வழங்கி, பாஜக வின் தாமரை சொந்தங்களாக ஏற்றுக்கொண்டோம்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்