சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் முடிவடைந்த நிலையில் தற்போது விநாயகர் சதுர்த்தி, கொண்டாட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட விநாயகர் சிலைகளை எந்தெந்த பகுதிகளுக்கு கரைக்கலாம் என்பது குறித்து காவல்துறை செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை பட்டினப்பாக்கம் நீலாங்கரை காசிமேடு மீன் பிடி துறைமுகம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய நான்கு கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும் விநாயகர் சிலையை கரைக்கும் போது நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அனுமதித்த வழித்தடங்களில் மட்டுமே அமைதியான முறையில் ஊர்வலம் செய்ய வேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.