குண்டர் சட்டத்தின் குரல்வளையை நெறித்த தங்கையே வருக! வளர்மதிக்கு ஜி.வி.பிரகாஷ் வரவேற்பு

செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (22:46 IST)
நாட்டின் அமைதியை அச்சுறுத்துபவர்கள் பலர் வெளியே சுதந்திரமாக நடமாடி கொண்டிருக்கும் நிலையில் கதிராமங்கலம் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு பெண் என்றும், கல்லூரி மாணவி என்றும் பாராமல் ஈவு இரக்கமின்றி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார் வளர்மதி



 
 
இந்த நிலையில் தமிழக அரசுக்கு ஆப்பு வைக்கும் அளவில் இன்று சென்னை ஐகோர்ட் வளர்மதியை குண்டர் சட்டத்தில் இருந்து நீக்கியது. இதனால் இன்று மாலை அவர் விடுதலை செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில் வளர்மதியின் விடுதலைக்கு தனது மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: குண்டர் சட்டத்தின் குரல்வளை நெறித்து..தங்கை வளர்மதி தரணி போற்ற வருகிறாள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்