நாளை முதல் சென்னையில் உள்ள மளிகை கடைக்காரர்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் எடுத்து வாகனங்களில் சென்று டெலிவரி செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மே 31 முதல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடமாடும் வாகனங்கள், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக மளிகை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
மளிகை கடைகளை திறக்கக் கூடாது என்றாலும் கடைகளில் உள்ள பொருள்களை எடுத்து வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யலாம் என்றும் ஆன்லைன் மூலம் எடுத்த ஆர்டர்களை பொது மக்களுக்கு வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் பெரிய கடைக்காரர்கள் மொத்த கடைக்காரர்கள் வியாபாரிகளுக்கு குடோன்களில் இருந்து பொருள்கள் எடுத்து வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. சூப்பர் மார்க்கெட் வணிக வளாகங்களில் உள்ள மளிகை கடைக்காரர்களும் ஆன்லைன் மூலம் ஆர்டர் எடுத்து விற்பனை செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.