தமிழகத்தை அடுத்து புதுச்சேரியில் கல்லூரிகளை மூட உத்தரவு!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (07:22 IST)
தமிழகத்தை அடுத்து புதுச்சேரியில் கல்லூரிகளை மூட உத்தரவு!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து சமீபத்தில் கல்லூரிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இம்மாத இறுதிக்குள் இறுதியாண்டு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளையும் முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது 
 
இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து தற்போது புதுவையிலும் கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து அங்கு கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் 
 
மேலும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ச்சியாக ஆன்லைனில் வகுப்புகளை நடத்தவும் அவர் ஆணையிட்டுள்ளார். இதனையடுத்து இன்று முதல் புதுச்சேரி கல்லூரிகள் மூடப்படுகிறது என்பதும் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள் குறித்து இன்னும் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்