இன்று முதல் நீட் தேர்வுக்கான விண்ணப்பம் ஆரம்பம்: விண்ணப்பிப்பது எப்படி?

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (09:41 IST)
2020ஆம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு இன்று தொடங்கவிருக்கின்றது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கு நீட் தேர்வு 2020ஆம் ஆண்டு, மே மாதம் 3ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்வுக்கான விண்ணப்பபதிவு இன்று தொடங்கி இம்மாதம் 31-ம் தேதி முடிவடைகிறது
 
இந்த தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை தற்போது பார்ப்போம்
 
முதலில் www.ntaneet.nic.in  என்ற இணையதளம் சென்று அதில் கேட்கப்பட்டுள்ள மாணவர்களின் தகவல்கள், புகைப்படம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு ஆள்மாறாட்ட புகார் எழுந்துள்ளதால் இந்த ஆண்டு முதல் ஆதார் எண் கட்டாயமாகப்பட்டுள்ளது. 
 
பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ.1500 விண்ணப்ப கட்டணம் உண்டு. இதர பிற்படுத்தப்பட்டவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு ரூ.1400 விண்ணப்ப கட்டணமும், பட்டியலினத்தவர்களுக்கு ரூ.800 விண்ணப்ப கட்டணமும் வசூல் செய்யப்படும். கட்டணங்களை
ஆன்லைன் மற்றும் வங்கிகள் மூலம் ஜனவரி 1ஆம் தேதி வரை கட்டணத்தை செலுத்தலாம். 
 
மேலும் 2020ஆம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என்பதும், 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விபரங்களுக்கு https://ntaneet.nic.in/Ntaneet/ShowPdf.aspx?Type=E0184ADEDF913B076626646D3F52C3B49C39AD6D&ID=DA4B9237BACCCDF19C0760CAB7AEC4A8359010B0 என்ற இணையதளம் சென்று பார்க்கவும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்