இன்று முதல் கத்தரி வெயில் ஆரம்பம்.. வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை..!

Mahendran
சனி, 4 மே 2024 (09:29 IST)
இன்று முதல் கத்தரி வெயில் ஆரம்பமாக உள்ளதை அடுத்து வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

மே நான்கு முதல் அதாவது இன்று முதல் மே 29ஆம் தேதி வரை 26 நாட்களுக்கு கத்தரி வெயில்  தாக்கம் இருக்கும் என்றும் இந்த நாட்களில் வழக்கத்தை விட மூன்று முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை விட அதிக வெப்பம் பதிவாகி வருகிறது என்றும் குறிப்பாக கரூரில் நேற்று 112 டிகிரி வெப்பம் பதிவாகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் இன்று முதல் கத்தரி வெயில் தொடங்குவதால் அடுத்து வரும் 26 நாட்களும் வெப்பம் அதிகரிக்கும் என்றும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெப்பம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது

ஒவ்வொரு ஆண்டும் மே மாத தொடக்கத்தில் சூரியனுக்கு மிக அருகில் பூமி வரும் என்பதால் தான் இந்த கத்திரி வெயில் காணப்படுகிறது என்றும் எனவே மக்கள் காலை 11:00 மணி முதல் பிற்பகல் 3:30 வெளியே செல்ல வேண்டாம் என்றும் குறிப்பாக குழந்தைகள் முதியவர்கள் கர்ப்பிணிகள் ஆகியோர் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

ஊட்டி கொடைக்கானலில் கூட இந்த கத்திரி வெயில் நேரத்தில் 30 டிகிரி அளவுக்கு செல்சியஸ் பதிவாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்