பெண்களுக்கு இலவச கனரக வாகன ஓட்டும் பயிற்சி! தமிழக அரசு அறிவிப்பு! - உடனே விண்ணப்பிங்க!

Prasanth K

ஞாயிறு, 13 ஜூலை 2025 (12:06 IST)

தமிழக அரசு ‘நான் முதல்வன்’ திட்டம் மூலமாக பல திறன்வளர் பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறது. அவ்வாறாக தற்போது பெண்களுக்கு கனரக வாகனம் ஓட்டும் இலவச பயிற்சி அளிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இப்பயிற்சி "நான் முதல்வன் திட்டத்தின் கீழ்" தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் (Institute of Road Transport) மூலம் இலவசமாக அளிக்கப்படவுள்ளது.

 

இப்பயிற்சியில் சேர கீழ்காணும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்

 

இந்த பெண்களுக்கான இலவச கனரக வாகன ஓட்டும் பயிற்சி காலம் 65 வேலை நாட்கள் என கூறப்பட்டுள்ளது.

 

பயிற்சி நடைபெறவுள்ள மையங்கள்:

கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், வேலூர், திருச்சி (மிஸிஜி), கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, பொள்ளாச்சி, ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர்

 

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் : 20 ஆகஸ்ட் 2025

 

விண்ணப்பம் மற்றும் மேல் விவரங்களுக்கு : https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்