ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துகிறார் ஓபிஎஸ்: ஜெயகுமார் கிண்டல்!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (17:00 IST)
ஆளில்லாத கடையில் ஓ பன்னீர்செல்வம் டி ஆத்துக்காரர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்
 
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டிருக்கும் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இணை ஒருங்கிணைப்பாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்து வருகிறார்
 
 இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியபோது ஓ பன்னீர்செல்வம் சார்பில் அதிமுகவினர் யாரும் இல்லை என்றும் ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓ பன்னீர்செல்வம் ஆட்களை நியமித்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின் சொத்துவரி, விலைவாசி, மின்கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மறைந்த தலைவர்களுக்கு  நினைவுச்சின்னம் அமைப்பதற்கு பணம் இருக்கும் திமுக அரசுக்கு மக்கள் நலத்திட்டங்களுக்கு பணம் இல்லாமல் போனது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்