முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் உறவினர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மனைவி நளினியின் தங்கை மருமகன் சிவமூர்த்தி என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் சிவமூர்த்தி திடீரென காணாமல் போய்விட்டதாகவும், பணத்திற்காக சிவமூர்த்தியை 3 பேர் கடத்தியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கடத்தப்பட்ட சிவமூர்த்தி கொலை செய்யப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது. திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொழில் செய்து வந்த சிவமூர்த்தி கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 3 பேர்களிடம் போலீசார் விசாரணை செய்தபோது சிவமூர்த்தியை பணம் கேட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடத்தியதாகவும் அவரை கொலை செய்துவிட்டு உடலை எங்கே வீசியெறிவது என்று தெரியாமல் சடலத்துடன் காரில் சுற்றி வருவதாகவும் தெரிவித்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன. போலீசார் மேலும் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.