உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்குன்னு கேட்ட இளைஞரை சுட்டுக்கொன்ற பஞ்சாயத்து தலைவர்

புதன், 27 ஜூன் 2018 (07:41 IST)
அரியானாவில் சொத்து விவரத்தைக் கேட்ட இளைஞரை பஞ்சாயத்து தலைவர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் பிப்லி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான  அஷிஸ் தாஹியா(24), அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரான  ராம் நிவாசின் சொத்து விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டம்(ஆர்.டி.ஐ) மூலம் கோரியுள்ளார். 
 
இதனையறிந்த ராம் நிவாஸ் அந்த இளைஞர் மீது கடும் கோபமடைந்துள்ளார். பின்னர் அந்த இளைஞரின் இருப்பிடத்திற்கு சென்ற ராம் நிவாஸ், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அஷிஷை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அஷிஸ் தாஹியா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் கொலை செய்த ராம் நிவாஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்