நாளை முதல் வடகிழக்கு பருவ மழை தொடக்கம்: வானிலை ஆய்வு மைய தலைவர் தகவல்..!

Siva
திங்கள், 14 அக்டோபர் 2024 (12:30 IST)
வடகிழக்கு பருவமழை அக்டோபர் இரண்டாவது வாரம் தொடங்கும் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வளிமண்டல கீழ் இருக்கு சுழற்சியுடன், வங்க கடலில் நிலவுகிறது. அதேபோல்  மற்றொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புயல் சின்னம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து அடுத்த நான்கு நாட்களில் விலகும் நிலையில், தென்னிந்திய பகுதிகளில் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று வீசும். இதனால் அக்டோபர் 15 அல்லது 16ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என அவர் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதால், அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும். குறிப்பாக, சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் 200 மில்லி மீட்டருக்கும் மேல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும். ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.



Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்