வெள்ளம் காரணமாக கடலூர்-சென்னை சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் போக்குவரத்து தொடங்கி விட்டதாகவும், அந்த பகுதியில் இயல்பு நிலை திரும்பி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை உள்பட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக புதுவை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், கடலூரிலிருந்து சென்னைக்கு புதுவை வழியாக செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது வந்துள்ள தகவலின் படி, பல இடங்களில் இயல்பு நிலை திரும்பி, வழக்கம்போல் வாகனங்கள் செல்வதாக கூறப்படுகிறது.
அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து தற்போது 18 ஆயிரம் கனஅடி மட்டுமே தண்ணீர் வெளியேற்றியதால், திருவண்ணாமலை பகுதியில் வெள்ளம் படிப்படியாக குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.