தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை: வானிலை அறிவிப்பு!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (13:55 IST)
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது 
 
ஏற்கனவே கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக தற்போது அரபிக் கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவிப்பு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்