உறவுக்கு அழைத்த 70 வயது கணவரை வெட்டி கொலை செய்த மனைவி

Webdunia
சனி, 13 மே 2017 (14:57 IST)
கரூர் அருகே உறவுக்கு அழைத்த 70 வயது கணவரை, முதல் மனைவி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கரூர் லாலாபேட்டை, வேங்காம்பட்டியைச் சேர்ந்த குப்புசாமி(70) என்பவருக்கு அவரது மனைவி இளஞ்சியம் என்பவருக்கும் 3 மகள்கள். 3 மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இதையடுத்து குப்புசாமி இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டு இரண்டாவது மனைவியோடு வாழ்ந்து வந்தார்.
 
ஒருநாள் முதல் மனைவி நினைவு வந்து அவரை பார்க்க சென்றுள்ளார். அங்கு தனது முதல் மனைவியை தனிமையில் இருக்க ஆசையாக அழைத்துள்ளார். ஆத்திரத்தில் இருந்த இளஞ்சி குப்புசாமியை உருட்டு கட்டை மற்றும் அரிவாள் கொண்டு தாக்கியுள்ளார். இதில் குப்புசாமி மரணமடைந்தார்.
 
தகவல் அறிந்த காவல்துறையினர் இளஞ்சியத்தை கைது செய்தனர். விசாரணையில், கணவர் உறவு அழைத்தாகவும், ஆத்திரத்தில் தாக்கியதாகவும் இளஞ்சியம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்