கரூர் அடுத்த வெங்கமேட்டில் திடீரென்று குப்பையில் தீ விபத்து!

புதன், 18 ஜூலை 2018 (18:52 IST)
தனியார் பள்ளி மற்றும் பிரபல கோயில் அருகே ஏற்பட்ட தீயினால் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.


கரூர் அடுத்த வெங்கமேட்டில் நேரு நகர் முடிவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ கருப்பண்ணசுவாமி ஆலயத்தின் அருகிலேயும், எக்விடாஸ் என்கின்ற தனியார் பள்ளியின் அருகே குப்பைக்கிடங்கில் திடீரென்று மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தியதால், தீ யானது., சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீ ஏரிந்தது.

கரூர் தீயணைப்பு துறையினர் விரைந்து போராடி தீயை அணைத்தனர். அருகிலேயே தனியார் பள்ளி, கோயில் மட்டுமிலலாமல் டெக்ஸ்டைல் நிறுவனங்களும் பொதுமக்களும் ஏராளமானோர் குடியிருக்கும் அந்த பகுதியில் ஏற்பட்ட தீயினாலும், அதில் ஏற்பட்ட புகையினாலும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் தீ மற்றும் புகையினால் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது.

-அனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்