நீதிமன்றத்தில் ஆஜராகாத எஸ்.வி.சேகர் - கடுப்பான நீதிபதி

வியாழன், 5 ஜூலை 2018 (15:29 IST)
நடிகர் எஸ்.வி.சேகருக்கு கரூர் நீதிமன்றத்தில் ஜூலை 20ம் தேதி ஆஜராக உத்த, விடப்பட்டுள்ளது. அப்படி ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
 
பெண் செய்தியாளர்களை அவதூறாக முகநூலில் பகிர்வு செய்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது இந்திய குடியரசு கட்சி மாநில அமைப்பாளர் பாண்டியன் என்பவர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தி ல் கடந்த 24-04-18 ல் தொடர்ந்தார். இந்த வழக்கில் நடிகர் எஸ் வி சேகரை ஜூலை 5ம் தேதி இன்று நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. 
 
ஆனால் இன்று எஸ்வி சேகர் ஆஜராகமல் அவர் சார்பில் வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது  வழக்கறிஞர் எஸ்வி சேகருக்கு காய்ச்சல் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் வரமுடியவில்லை என நீதிபதியிடம் தெரிவித்தார். 
 
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி சுப்பபையா 20ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார். மேலும் இனி நீதிமன்றம் அனுப்பும் சம்மனுக்கு ஒழுங்காக நீதிமன்றத்தில் ஆஜர் ஆவேன் என பாண்டு பேப்பரில் எஸ்வி சேகர் கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும் என கடுமையான உத்தரவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது
 
பேட்டி. ராஜேந்திரன் வழக்கறிஞர் கரூர்
 
-சி.ஆனந்தகுமார்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்