சென்னை சில்க்ஸ் அருகே உணவகத்தில் மீண்டும் தீ விபத்து!

Webdunia
திங்கள், 5 ஜூன் 2017 (10:23 IST)
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை தி நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் 7 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு அந்த கட்டிடத்தை இடிக்கும் நிலமைக்கு வந்துவிட்டனர். அதனை இடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


 
 
இந்நிலையில் மீண்டும் தி நகரில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிலும் இந்த விபத்து சென்னை சில்க்ஸ் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் நடந்துள்ளது. இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
 
தீ விபத்து ஏற்பட்ட அந்த உணவு விடுதியில் தங்கியிருந்த அனைவரும் பத்திரமாக, தீயணைப்புப் படை வீரர்களால் மீட்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து இந்த தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்