குட்கா விவகாரத்தில் தப்பிய பெரிய மீன்கள்

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (12:22 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குட்கா விவகாரம் தமிழக அரசியலையே புரட்டி போட்டது. சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் இரண்டு காவல்துறை உயரதிகாரிகள் மீது எதிர்க்கட்சிகள் புகார் கூறின.



 
 
இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கையில் அமைச்சர் பெயரோ, உயரதிகாரிகள் பெயரோ இல்லை. அதற்கு பதிலாக 2 காவல்துறை அதிகாரிகள் உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 17 பேர்களில் 2 பேர் குட்கா குடோனின் புரோக்கர்களான மாதவராவ், ராஜேந்திரன் ஆகியோர்கள் அடங்குவர். அதேபோல், செங்குன்றம் காவல்துறை உதவி ஆணையர், சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது. இந்த தகவலை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இயக்குநர் மஞ்சுநாதா தெரிவித்துள்ளார்.
 
நேரிடையாக லஞ்சம் பெற்றதாக கருதப்படுவர்கள் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இயக்குநர் மஞ்சுநாதா கூறியுள்ள நிலையில் சுகாதார அமைச்சர், டி.ஜி.பி., முன்னாள் சென்னை காவல் ஆணையர் மீதும் வழக்குப்பதிவு செய்ய எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
 
அடுத்த கட்டுரையில்