தொழிலதிபரை ஆபாசப் படம் எடுத்து மிரட்டும் பெண்

Webdunia
ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2016 (13:28 IST)
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள கோத்தாரி நகரைச் சேர்ந்த ஆர்.பிரகாஷ் (34) ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


 
அதில், "நான் சிங்காநல்லூர் பகுதியில் சொந்தமாக டைல்ஸ் கடை நடத்தி வருகிறேன். எனது கடைக்கு நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த உள் அலங்காரத் தொழில் செய்துவரும் சம்சுயா (28) டைல்ஸ் வாங்கிச் செல்வார். அப்போது, எங்கள் இருவருக்கும் இடையே தொழில்ரீதியான பழக்கம் மட்டுமே இருந்தது. இந்நிலையில், கடந்த ஜூலை 13-ஆம் தேதி இக்லேஷ் என்பவர் என்னைக் தொடர்பு கொண்டு சம்சுயாவின் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதனால் நான் அங்கு சென்றேன். அப்போது எனக்கு குளிர்பானம் கொடுத்தனர்.

அதைக் குடித்ததும் நான் மயக்கமடைந்தேன். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்தவுடன் வீட்டுக்கு வந்து விட்டேன். இதைத் தொடர்ந்து இக்லேஷ் மற்றும் சம்சுயா ஆகியோர் எனக்கு போன் செய்து என்னை ஆபாசப் படம் எடுத்து வைத்துள்ளதாகவும், பணம் தரவில்லை என்றால் அதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்போவவதாகவும் மிரட்டினர். இதையடுத்து, நானும் கடந்த மாதம் முதல் தற்போது வரை ரூ. 19 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்துள்ளேன். மேலும், ரூ. 15 லட்சம் கொடுக்குமாறு மிரட்டல் விடுத்து வருகின்றனர்” என்றார். புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் சம்சுயா, இக்லேஷ் ஆகியோரைக் கைது செய்தனர்.

இதனிடையே, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் சம்சுயா புகார் அளித்துள்ளார். அதில், பிரகாஷ் தனக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் பிரகாஷ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்