ஆவடி ரயில் நிலையத்தில் பெண் போலீஸ் ஏட்டு பரிதாப பலி.. என்ன நடந்தது?

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (09:49 IST)
ஆவடி ரயில் நிலையத்தில் பெண் போலீஸ் ஏட்டு பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் என்ற பகுதியை சேர்ந்த ஸ்ரீ பிரியா என்பவர் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் ஏட்டுவாக பணியாற்றி வந்தார். இன்னும் திருமணம் ஆகாத அவருக்கு தந்தை மற்றும் இரண்டு மூன்று சகோதரிகள் உள்ளனர். 
 
இந்த நிலையில் ஸ்ரீ பிரியா நேற்று காலை ஆவடி ரயில் நிலையம் வந்த பிறகு அங்கு பைக்கை பார்க்கிங் செய்துவிட்டு ரயில் நிலையத்தின் நடைமேடையில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். 
 
அப்போது திடீரென ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியதை அடுத்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது
 
இந்த விபத்து தற்செயலாக நடந்ததா? அல்லது ரயில் முன் ஸ்ரீப்ரியா தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்