6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: - சிறுமியின் தந்தையும் அரசியல்வாதியுமான ரவி கைது..!

Mahendran
சனி, 24 ஆகஸ்ட் 2024 (12:33 IST)
6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த சிறுமியின் தந்தையும் அரசியல்வாதியுமான ரவி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
நேற்று முன் தினம் இரவு தலையில் அடிபட்டதாக கூறி சென்னை எழும்பூர் மருத்துவமனையில் 6 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டார். சிறுமியை முழு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருடைய உடம்பில் பல  காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மருத்துவர்கள் அளித்த புகாரின் பேரில் குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை செய்தனர்.
 
விசாரணையில் 6 வயது சிறுமியை அவரது தந்தையான புதுச்சேரி புரட்சி பாரதம் கட்சி நிர்வாகியான ரவி பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த சிறுமியின் தந்தையும், புரட்சி பாரதம் கட்சி நிர்வாகியுமான ரவி கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 
பொதுவாக பெண் குழந்தைகளுக்கு அப்பா என்றால் மிகவும் பிடிக்கும் என்று கூறப்படும் நிலையில் அப்பாவே தனது ஆறு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததை அடுத்து அந்த நபருக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்