3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை முயற்சி !

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (21:36 IST)
சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் புதூரில் சிவமுனி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ராமல்ட்சிமி இந்த தம்பதியர்க்கு 3 குழந்தைகள் உள்ளன.

ராமலட்சுமி் இன்றூ பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றிருந்த நிலையில், சிவமுனிதன்  மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கழுத்தை நெறித்துக் கொல்ல முயன்றுள்ளார்.

குழந்தைகளின் சப்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் கதவைத்தட்டியுள்ளனர். உடனே விஷம் அருந்திய சிவமுனி கத்தியால் தனது கை கால்களை கத்தியால் வெட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

தொழிற்சாலையில் இருந்து வீட்டுக்கு வந்து பார்த்த ராமலட்சுமி பதறிப்போய் 3 குழந்தைகளையும் மருத்துவமனையில் சேர்ந்தார். ஆனால் 7 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது உயிரிக்கு ஆபத்தான நிலையில் சிவமுனி மற்றும் 2 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்