பெரும்பலூர் மாவட்டத்தில் மது போதையில் ஒருவர் தனது 9 வயது பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆலத்தூர் வரகுபாடியை சேர்ந்தவர் 38 வயதான செல்வம். இவருக்கு இரண்டு மகன்களும் 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று அவரது மனைவி உமா (35) வேலைக்கு சென்றுவிட்டார்.
வீட்டில் அவரது மகள் மட்டும் இருந்துள்ளார். அப்போது செல்வம் மது அருந்திவிட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் இருந்த தனது 9 வயது மகளை அவர் போதையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
வேலைக்கு சென்ற அவரது மனைவி உமா, தனது மகள் சோர்வாகவும், அதிர்ச்சியாகவும் இருந்ததை கண்டு நடந்த சம்பவும் குறித்து விசாரித்து அறிந்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உமா தனது கணவர் மீது அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.