நானா நானி குடியிருப்பிற்காக நொய்யலில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டு...

J.Durai

வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (08:54 IST)
கோவை வெள்ளியங்கிரி மலையில் இருந்து வரும் நீரை நானா நானி என்ற முதியோர்கள் வசிக்கும் குடியிருப்பின் பயன்பாட்டிற்காக விதிமீறல் செய்து முறைகேடாக எடுத்து செல்வதாகவும், இது குறித்து குடியிருப்பு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள கடிதத்தின் உண்மை நிலை அறிக்கையை மாவட்ட ஆட்சியர் தர வேண்டி ஆட்சியரிடம் புதுக்காட்டு வாய்க்கால் நீர் பாசன விவசாயிகள் நல சங்கத்தினர் மனு அளித்தனர்.
 
இது குறித்து பேசிய  புதுக்காட்டு வாய்க்கால் நீர் பாசன விவசாயிகள் நல சங்க விவசாயிகள்...
 
2019ம் ஆண்டு நானா நானி என்ற கட்டுமான நிறுவனத்தின் விவசாய நிலத்துக்கு நீர் கொண்டு வர வெள்ளியங்கிரி அடிவாரத்தில் கிணறு வெட்டி நீர் கொண்டு சொல்ல அவர்கள் அனுமதி வாங்கி இருந்ததாகவும் அப்போதே அந்த அனுமதி தவறு என கூறி உயர்நீதிமன்றத்தில் தாங்கள் வழக்கு தொடர்ந்தாக கூறினர்.  
 
அந்த வழக்கு தங்களுக்கு சாதகமாக வந்து, அவர்கள் போட்டுள்ள  பைப் லைன்களை  எடுக்க நீதிமன்றம் கூறியதாகவும் பின்னர் குடியிருப்பின் உரிமையாளர்  போலி கடிதம் ஒன்றை தாசில்தாரிடம் அளித்ததாக நீதிமன்றத்தில் அளித்துள்ளதாகவும்  இந்நிலையில் அந்த கடிதத்தின் உண்மை அறிக்கையை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக கூறினர். 
 
அவர்களின் இந்த செயலால்  அப்பகுதி விவசாயிகள் அனைவரும் பாதிக்கப்படுவோம் எனவும் மக்களுக்கும் குடிநீர் இன்றி தவிப்பார்கள் எனவும் கூறினர். நொய்யல் ஆற்றங்கரை ஓரமாகவே கிணறு வெட்டி போர்வேல் போட்டுள்ளார்கள் எனவும் அதற்கான அனுமதியெல்லாம் விதிமுறைகளுக்கு முரணாக பெற்றுள்ளதாக குற்றம் சாட்டினர். அப்பகுதியில் பைப் லைன் போடுவதற்கு விவசாயிகளுக்கே அனுமதி வழங்கப்படுவதில்லை என்ற நிலையில் இவர் விவசாயி என்று கூறி அனுமதி பெற்று பைப் லைன் போட்டுள்ளதாக தெரிவித்தனர். 
 
இதனை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளதாகவும் அந்த உத்தரவின் மீது அவர் அப்பீல் செய்துள்ளார் எனவும் இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உண்மை அறிக்கை தருவதாக கூறியுள்ளார் என கூறினர். 
 
குடியிருப்பிற்காக நொய்யல் ஆற்றை கடந்து 8 இஞ்ச் பைப் போட்டுள்ளார்கள் எனவும் விவசாயிகளுக்கே 2 இஞ்ச் பைப் தான் அனுமதி அளிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தனர். 
 
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் அளித்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் மாவட்ட ஆட்சியர் அவ்வாறு எந்த கடிதமும் வரவில்லை என்கிறார் என தெரிவித்தனர்.
 
அவரது குடியிருப்புகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக ஆற்றை ஒட்டி கிணறு வெட்டி நீர் எடுப்பதாகவும் இதன் மூலம் சுமார் 4000 ஏக்கர் பாசன விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனவு. மேலும் அங்கு நிலத்தடி நீரும் போய்விடும் என கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்