பிரபல நடிகை தற்கொலை முயற்சி ...ரசிகர்கள் அதிர்ச்சி

புதன், 1 ஜூன் 2022 (17:12 IST)
தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை மைதிலி.இவர் கடந்த 6 மாதத்திற்கு முன் தனது கணவர் ஸ்ரீதர் ரெட்டி மற்றும் 4 பேருக்கு எதிரான துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்த முதற்கட்ட விசாரணை முடிந்துள்ள நிலையில், சூரியபேட்டை மாவட்டத்தில் உள்ள மோத்தி காவல் நிலையத்தில் அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக கட்டா மைதிலி புகார் அளித்திருந்தார்.

இவ்வழக்கின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், நடிகை கட்டா மைதிலி ஒருவகை மதுபானம் சுமார் 8 பாட்டில்கள் மற்றும் தூக்கு மாத்திரைகளைச் சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட போலீஸார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்