விருதை ஏற்க மறுத்த தலைமைச் செயலர் இறையன்பு

புதன், 1 ஜூன் 2022 (15:45 IST)
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு தனக்கு அளிக்கும் விருதை தவிர்க்கும்படி கடிதம் எழுதியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் இயக்கிவரும் வேளாண் பல்கலைக் கழகத்தின் சார்பில் மேன்மைமிகு முன்னாள் மாணவர் விருது, தலைமைச் செயலாளர் இறையன்புக்கு அளிப்பதாக  அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, தலைமைச் செயலர்  இறையன்பு, அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதா லட்சுமிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மேன்மை மிகு முன்னாள் மாணவர் விருதை எனக்கு வழங்கு இருப்பது கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன். எனது கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மற்ற  மாணவர்களுக்கு மேலும் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.  நான் இப்போதைய நிலையில் இருந்துகொண்டு தாங்கள் அளிக்கும் விருதைப் பெறுவது என்பது பதவிக்கான மரபுசார்ந்த நிலைகளைக் கடந்தது ஆகிவிடும். எனவே இவ்விருதை எனக்கு அளிப்பதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்