ஜெயலலிதா சுயநினைவோடுதான் கைரேகை வைத்தார்: பாலாஜி வாக்குமூலம்!

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (20:36 IST)
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி உடல்நல குறைபாடு காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்த அவர் டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். 
இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 
 
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது தமிழ்நாட்டில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை இடம் பெற்றிருந்தது. 
ஜெயலலிதாவின் கைரேகை அவர் சுயநினைவோட் இருந்த போது வாங்கப்பட்டதா என கேள்வி எழுந்தது. இதற்கு நடந்த விசாரணையில் மருத்துவர் பாலாஜி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலம் குறித்து விசாரணை குழு கூறியது பினவருமாறு...
 
கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார். அப்போலோ அறையில் வைத்து ஜெயலலிதா கைரேகை பெறப்பட்டுள்ளது. கைரேகை பெறப்பட்டபின் ஜெயலலிதா விரலில் இருந்த மையை பாலாஜி அழிக்க முயன்றார். அவரை தடுத்து சசிகலா மையை அழித்து எடுத்துள்ளார். சசிகாலா கேட்டுக் கொண்டதன் பேரில் பூங்குன்றன் என்பவரை அழைத்து வந்து கைரேகை பெறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்