ஆகஸ்ட் 1 முதல் தமிழகத்தில் என்னென்ன தளர்வுகளை எதிர்பார்க்கலாம்??

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (11:29 IST)
மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப தமிழகத்தில் என்னென்ன தளர்வுகள் எதிர்ப்பார்க்கலாம் என்பதன் தொகுப்பு இதோ... 
 
மத்திய அரசு இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கியுள்ளது எனவே தமிழக அரசும் இதனை கொண்டுவர வாய்ப்புள்ளது. 
 
மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்கு உள்ளே பொதுமக்கள் செல்லவும், சரக்குகளை கொண்டுசெல்லவும் எந்தத் தடையும் இல்லை. இதற்காக தனியாக அனுமதியோ, இ-பாஸோ தேவையில்லை என மத்தியா அரசு கூறியுள்ள நிலையில் தமிழக அரசு இதனை பரிசீலிக்கும் என தெரிகிறது. 
 
மெட்ரோ ரயில், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பார்கள், கலையரங்குகள் போன்றவை செயல்பட அனுமதி இருக்காது. போருந்து சேவை குறித்து ஏதேனும் அறிவிப்புகள் வர வாய்ப்புள்ளது.  
 
சமூக, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு போன்ற மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை நீடிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு நீடிக்கப்பட கூடும். 
 
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களை திறப்பதற்கு அடுத்த மாதம் 31 ஆம் தேதி வரை தடைவிதிக்கப்படும் என தெரிகிறது. இதனைத்தவிர்த்து கடைகள் செயல்பட கூடுதல் நேரம் போன்றவை வழங்கப்படலாம், ஞாயிறுகளில் முழு பொதுமுடக்கம் தளர்த்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்