இது புதுசா இருக்கு! - தேர்தல் ஆணையத்தை கண்டித்து போராட்டம் நடத்தும் இளங்கோவன்

Webdunia
சனி, 28 மே 2016 (10:00 IST)
சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொண்டதாக கூறி, கமிஷனை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் அறிவித்துள்ளார்.
 

 
இது குறித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பணபலத்தால் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சியை பிடித்துள்ளார். இது உண்மையான வெற்றி அல்ல. திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கும் உண்மையான தோல்வி அல்ல.
 
அதிமுகவினர் ஒரு ஓட்டுக்கு ரூ.200, ரூ.300, ரூ,500 என பணத்தை வாரி இறைத்துள்ளனர். இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டு அதிமுகவின் செயல்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை.
 
கடந்த பாராளுமன்ற தேர்தலில் நடந்து கொண்டதை போலதான் இந்த தேர்தலிலும் தேர்தல் ஆணையம் நடந்து கொண்டுள்ளது. தேர்தல் ஆணையம் மீது யார் நடவடிக்கை எடுப்பது? எனவே தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் போராட்டம் நடத்தும்” என்று கூறுயுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்