காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இளங்கோவனுக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருந்ததை அடுத்து அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் சென்னை மியாட் மருத்துவமனையில், ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்த ஈ வி கே எஸ் இளங்கோவன், தந்தை பெரியாரின் அண்ணனின் பேரனாவார். ஈ வி கே சம்பத்தின் மகன் ஆவார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செயல்பட்டுள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.