முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்ய வேண்டும். ஈவிகேஎஸ் இளங்கோவன்

Webdunia
ஞாயிறு, 9 ஏப்ரல் 2017 (22:20 IST)
சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறையினர் ரெய்டில் சிக்கிய முக்கிய ஆவணங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட முக்கிய அமைச்சர்கள் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரம் சிக்கியது.


 


இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வாக்களர்களுக்கு பணம் விநியோகம் செய்தது தொடர்பாகவும், பணம் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாகவும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினரும், தேர்தல் ஆணையமும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாக ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது.

அப்படி இருந்தும் தேர்தல் ஆணையம் ஏன இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 9 அமைச்சர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். பணம் பறிமுதல் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைபற்றியது தொடர்பாக தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முதல்வரே நேரடியாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த கீழ்த்தரமான செயல் முதன்முறையாக நடந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்