கடந்த சில நாட்களாக நடிகர் கமலும் தமிழக அரசியலும் தான் ஹாட் டாப்பிக்காக உள்ளது. நடிகர் ரஜினியை முந்திக்கொண்டு கமல் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்ற அளவுக்கு உள்ளது நிலமை. இந்நிலையில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சியாக உள்ள கட்சிகள் நடிகர் கமலை கடுமையாக விமர்சித்து வருகிறது.
நடிகர் கமல் அரசியலுக்கு தகுதியற்றவர், அவர் முதுகெலும்பில்லாத கோழை, அரசை விமர்சிக்க கமலுக்கு தகுதியில்லை என பாஜகவினரும், அதிமுகவினரும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் கமல் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, அரசியல் என்பது யாருக்கும் பட்டா போட்டு கொடுக்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் ரஜினிகாந்த் கூட அரசியலுக்கு வரலாம்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் எல்லாரும் முதலமைச்சராக போட்டிபோடுறாங்க. தீபா கூட முதலமைச்சரா வரனும்னு ஆசைப்பட்டாங்க. அது அவங்க விருப்பம். அதனால் கமல் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு எப்படி சொல்ல முடியும். அவர் அரசியலுக்கு வரலாம் என கூறியுள்ளார்.