'எத்தனை தோல்விகள் வந்தாலும் ஓட மாட்டேன்' - விஜயகாந்த் அதிரடி

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2016 (14:49 IST)
எத்தனை தோல்விகள் வந்தாலும் அரசியலில் இருந்து ஓட மாட்டேன். அதுபோலத்தான் என் கட்சியினரும். என் கூடவே இருப்பார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.


 

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் தனபாண்டியனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய விஜயகாந்த், ”திமுக, அதிமுக கட்சியில் ஆட்கள் இல்லா மல், எங்கள் கட்சியில் இருந்து ஆட்களை இழுக்கிறார்கள். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டனர். அதனால், அந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல், கடந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு சென்றேன்.

மக்கள் ஆதரிக்காததால் தேர்தல் முடிந்ததும் மக்கள் நலக் கூட்டணியை விட்டு வெளியேறினேன். அந்த கூட்டணியில் தொகுதி உடன்படிக்கை மட்டுமே செய்து கொண்டோம். அதனால், நாங்கள் சந்தோஷ மாக பிரிந்துவிட்டோம். நானும் அவர்களை தாக்கி பேசுவதில்லை. அவர்களும் என்னை தாக்கி பேசு வதில்லை.

எத்தனை தோல்விகள் வந்தாலும் அரசியலில் இருந்து ஓட மாட்டேன். அதுபோலத்தான் என் கட்சியினரும். என் கூடவே இருப்பார்கள்” என்றார்.
அடுத்த கட்டுரையில்