ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்..!

Webdunia
வியாழன், 2 மார்ச் 2023 (08:01 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி இருந்ததாகவும் இருவரும் தீவிர பிரச்சாரம் செய்தனர் என்பதும் தெரிந்ததே. அது மட்டும் இன்றி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மற்றும் தேமுதிக கட்சியின் வேட்பாளரும் களத்தில் இருந்தார் என்பதும் சுமார் 70-க்கும் மேற்பட்ட சுயேட்சைகளும் போட்டியிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு அமைதியாக கடந்த 27ஆம் தேதி நடந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் வழங்க உள்ளது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கையில் முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளது என்றும் அதன் பிறகு பதிவான வாக்குகள் எண்ணப்படும்  என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்றும் வாக்கு இயந்திரங்கள் என்னும் அறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் பணியாளர்கள் அரசியல் கட்சி முகவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்