மக்களை முட்டாளாக்கும் போலி அமைப்பு தான் தேர்தல் ஆணையம்: முன்னாள் முதல்வர் காட்டம்..!

புதன், 1 மார்ச் 2023 (10:16 IST)
மக்களை முட்டாளாகும் போலி அமைப்பு தான் தேர்தல் ஆணையம் என மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். சிவசேனா தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் திடீரென இந்த விஷயத்தில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய அவர் தேர்தல் ஆணையம் ஒரு போலி அமைப்பு என்றும் மக்களை முட்டாளாக்கும் ஆணையம் என்றும் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு சாதகமாகவே தேர்தல் ஆணையம் நடந்து கொள்கிறது என்றும் அமைச்சர் அமித்ஷா உட்பட எத்தனை பேர் வந்தாலும் சிவசேனாவை அழிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
சிவசேனா வெறும் பெயர் மற்றும் சின்னம் மட்டுமல்ல என்றும் வில் அம்பு மட்டும் சிவசேனா அல்ல என்றும் சிவசேனா நம்முடையது அதை யாராலும் திருட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
2024 ஆம் தேடினால் நாட்டில் நடக்கும் கடைசி தேர்தல் என்ன எல்லோரும் நினைக்க ஆரம்பித்து விட்டனர் என்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் கவர்னர் சட்டசபையில் இரு அவைகளில் ஹிந்தியில் உரையாடுவது துரதிஷ்டமானது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்