அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு, அவரது எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி இனி செல்லாது என கடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஓபிஎஸ்க்கு ஒதுக்கப்பட்டது.
இதுகுறித்து பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி “நேற்று சட்டமன்றம் முடிந்த பிறகு முதல்வர் ஸ்டாலினும், ஓ.பன்னீர்செல்வமும் அரை மணி நேரம் பேசியுள்ளனர். அதிமுக கட்சி முடிவுகள் மற்றும் பொருப்பாளர்கள் பட்டியல் சபாநாயகருக்கு வழங்கப்பட்டிருந்த போதும் அதை மீறி ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவை ஒழிக்க முதல்வர் செய்யும் முயற்சிகள் பலிக்காது” என்று கூறியுள்ளார்.