ரேசன் கடைகளில் புதிய திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சக்ரபாணி, உதய நிதி ஸ்டாலின்!
திங்கள், 17 அக்டோபர் 2022 (20:57 IST)
ரேசன் கடைகளில் புதிய திட்டத்தை அமைச்சர் சக்கரபாணி மற்றும் உதய நிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தனர்.
தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த சட்டபேரவைத் தேர்தலில் திமுக அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.
அவரது தலைமையிலான அமைச்சரவையில் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இன்று ரேசனில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதாவது ரேசன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை மாநில உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியும் உதய நிதி ஸ்டாலின் எம்.எல்.ஏவும் இன்று தொடங்கி வைத்தனர்.
இந்தத் திட்டம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.