ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ஓபிஎஸ்!
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (15:05 IST)
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த அறிக்கை குறித்து கருத்து சொல்ல முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்த ஆறுமுகசாமி ஆணையம் இதுகுறித்தஅறிக்கை ஒன்றை முதல்வரிடம் சமீபத்தில் தாக்கல் செய்தது
இந்த அறிக்கையில் சசிகலா உள்பட ஒருசில ஒரு சிலரிடம் விசாரணை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் இது குறித்து கருத்து கூற ஓபிஎஸ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்தபோது முதலமைச்சராக ஓ பன்னீர்செல்வம் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது