தில்லு, திராணி இருந்தால் நேருக்கு நேர் போட்டி போடுங்கள்: திமுகவுக்கு ஈபிஎஸ் சவால்!

செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (11:11 IST)
தில்லு, திராணி இருந்தால் அதிமுகவுடன் நேருக்கு நேர் போட்டியிடுங்கள் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவுக்கு சவால் விட்டுள்ளார் 
 
கூட்டணி கட்சி இன்றி அதிமுக நேரடியாக அனைத்து தொகுதியிலும் போட்டியிட தயார் என்றும் திமுகவுக்கு தில்லு, திராணி இருந்தால் அனைத்து தொகுதியிலும் நேரடியாக போட்டியிடுமா என்றும் சவால் விடுத்துள்ளார் 
 
மேலும் மின்வெட்டு குறித்து கேள்வி கேட்டால் மின் தடை குறித்து  மின்சாரத்துறை அமைச்சர் பதில் சொல்கிறார்கள் என்று குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவையில் எந்த திட்டமும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்
 
திமுகவை நேருக்கு நேர் போட்டியிடுமாறு முன்னாள் முதல்வர் விடுத்துள்ள சவாலுக்கு திமுக என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்