எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக தான் ஜெயிக்கும்: ஓபிஎஸ் பரப்புரை

செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (11:06 IST)
அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக தான் ஜெயிக்கும் என தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள 52 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அனைத்து கூட்டங்களிலும் அதிமுகவுக்கு ஆதரவு கிடைத்து வருவதாக தெரிவித்தார்.
 
மேலும் கடந்த 30 ஆண்டுகால மக்களிடையே செல்வாக்கு பெற்றுள்ள ஒரே இயக்கம் திமுகதான் என்றும் பேசினார். மேலும் அடுத்து எப்போது சட்டமன்ற தேர்தல் வரும் நிச்சயமாக அதிமுக தான் ஜெயிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்