அதிமுக பொதுக்குழு தீர்ப்பு: ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (09:40 IST)
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி தீர்ப்பளித்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடிபழனிசாமி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அதிரடியாக தீர்ப்பளித்தார் 
 
மேலும் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையை அதிமுகவில் நீடிக்க வேண்டும் என்றும் அவர் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார், இந்த நிலையில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மேல்முறையீடு செய்தார்.
 
இந்த நிலையில் இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று நீதிபதிகள் துரைசாமி, சுந்தரம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்