ஓபிஎஸ்ஸை தொடர்ந்து டெல்லி புறப்படும் ஈபிஎஸ்! – பிரதமரிடம் பேசப்போவது என்ன?

Webdunia
ஞாயிறு, 25 ஜூலை 2021 (16:22 IST)
நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ள நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமியும் டெல்லி புறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை எதிர்கட்சி தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நாளை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கு இன்று டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் அவரை தொடர்ந்து அதிமுக இணை ஒருங்கினைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் இன்று மாலை டெல்லிக்கு பயணமாக உள்ளார்.

டெல்லியில் நாளை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து காவிரி நதிநீர் பிரச்சினை, உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்